Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வேளாண்மையில் பெண் விவசாயிகள்: மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாட்டம்

வேளாண்மையில் பெண் விவசாயிகள்: மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாட்டம்

காலமுறைத் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, வேளாண் நடவடிக்கைகளில் பெண்கள் 59.8 சதவீதமாக இருந்தனர். மகளிர் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய வேளாண்மையில் பெண் விவசாயிகளின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், மகளிர் விவசாயிகள் தினம் நேற்று தேசிய அளவில் கொண்டாடப்பட்டது.


டெல்லியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளாண் சாகுபடியில் பல்வேறு பணிகளில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கால்நடை பராமரிப்பு, விதை பாதுகாப்பு, இயற்கை வள மேலாண்மை மற்றும் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் போன்ற பணிகளிலும் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

காலமுறைத் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, வேளாண் நடவடிக்கைகளில் பெண்கள் 59.8 சதவீதமாக இருந்தனர். மகளிர் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு நிகழ்விலும் 50 முதல் 100 பெண் விவசாயிகள் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, பழங்குடியினப் பகுதிகளை சேர்ந்த பெண் விவசாயிகள் பங்கேற்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
முந்தைய செய்தி
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் பதவியேற்பு
அடுத்த செய்தி
பூஜை ஸ்பெஷல்: திருப்பூரில் இருந்து 110 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர்புடைய செய்திகள்